முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடையுத்தரவு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடையுத்தரவு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடையுத்தரவு

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 6:25 pm

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்டிருந்த தடையை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முழுமையான தலைக்கவசம் அணிவதற்கு இன்று காலை முதல் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிற்பகல் நீதிமன்றத்தினால் அதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவிலியன்கள் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

முமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் மோட்டார் சைக்கிள் செலுத்துகின்றவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.

1990 ஆம் ஆண்டின் தலைக்கவசம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசங்களை தடைசெய்ய பொலிஸாருக்கு அதிகாரமில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசங்களை அணிவதற்கு இன்று முதல் பொலிஸார் தடைவிதித்திருந்தனர்.

இந்த சட்டத்தை மீறுவோரிடம் சம்பவ இடத்திலேயே 500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்