நாட்டு மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சூறையாட இடமளிக்க முடியாது – இரா.சம்பந்தன்

நாட்டு மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சூறையாட இடமளிக்க முடியாது – இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 7:31 pm

நாட்டு மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சூறையாட யாருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கும் வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்