தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியம் – மஹிந்த ராஜபக்ஸ

தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியம் – மஹிந்த ராஜபக்ஸ

தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியம் – மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 7:02 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று சட்டதரணிகள் சிலரை சந்தித்தார்.

நாராஹென்பிட்டிய அபயராமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் முறைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சட்டதரணிகள் கலந்துரையாடினார்கள்.

இந்த சந்திப்பின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

எனது ஆட்சி காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து விசாரணை செய்கின்றனர் மேலும் அவர்கள் ஊடக கண்காட்சிகளை நடத்தி மகிழ்ச்சியடைகின்றனர், அது மட்டுமன்றி 60 மற்றும் 70 வயதுடைய ஓய்வுப்பெற்ற அப்பாவிகளையும் அழைத்து விசாரணை செய்கின்றனர் அவர்கள் வெளியில் வரும் போது கண்களில் கண்ணீர் நிறைந்துள்ளது, இது முறையான விடயமல்ல தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்