சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 1:11 pm

சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு- சித்தாண்டிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி கடந்த மாதம் சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 2 வருடத் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி 14 திகதி முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இந்த யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டுமென அவரது தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி, உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.

இதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் உதயசிறியின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்