இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு நாளை திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு நாளை திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு நாளை திருமணம்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 12:02 pm

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை நாளை (3) மணமுடிக்கவுள்ளார்.

டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தை முன்னிட்டு நடைபெறும் ஏனைய சடங்குகள் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றன.

உலகக்கிண்ண தொடரின் பாதியிலேயே ரெய்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

அவுஸ்திரேலியாவில் இருந்து அவர் நாடு திரும்பியதும் திருமண வேலைகள் வேகமாக நடந்தன.

திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் முடிந்து சில நாட்களில் அவர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

பிரியங்கா செளத்ரி தற்போது நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். ரெய்னாவும், பிரியங்காவும் சிறு வயது முதலே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்