அபிவிருத்தி வேலைகளின் போது தேசிய பொறியியலாளர்கள் மீது நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

அபிவிருத்தி வேலைகளின் போது தேசிய பொறியியலாளர்கள் மீது நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 8:21 pm

அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது தேசிய பொறியியலாளர்கள் மீது நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் வருடாந்த சம்மேளனம் இன்று கொழும்பில் இடம்பெற்றது.

விவசாய நீர்ப்பாசன பொறியியல் பிரிவுகளில் 2500 இற்கும் அதிகமான நிர்மானங்களுக்கு உரிமைக்கோரும் இலங்கை பொறியியல் நிறுவனம் ஆசியாவில் பழைமையான பொறியியல் நிறுவனமாகும்.

எம்.டீ.வீ. , எம்.பீ.சீ ஊடக வலையமைப்பு இந்த சம்மேளனத்திற்கு ஊடக அனுசரணை வழங்கியுள்ளது.

பொறியியல் துறையின் சர்வதேச சவால்கள் தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்