அதிபர் பதவி வெற்றிடமாகும் 106 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை

அதிபர் பதவி வெற்றிடமாகும் 106 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை

அதிபர் பதவி வெற்றிடமாகும் 106 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 12:38 pm

தேசிய பாடசாலைகளில் வெற்றிடங்களுக்கு அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் அதிபர் பதவி வெற்றிடமாகும் 106 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கல்வி நிருவாக சேவையில் 1, 2 மற்றும் 3 ஆம் தர உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் 1 ஆம் தர உத்தியோகத்தர்களில், தகுதியான அதிபர்கள் வெற்றிடங்களுக்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

அதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் 09 பாடசாலைகளுக்கும், மத்திய மாகாணத்தில் 15 பாடசாலைகளுக்கும், வடக்கில் 16 பாடசாலைகளுக்கும், கிழக்கில் 10 பாடசாலைகளுக்கும் தெற்கில் 23 பாடசாலைகளுக்கும் அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்