GSP சலுகை மீண்டும் கிடைக்குமா?

GSP சலுகை மீண்டும் கிடைக்குமா?

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2015 | 7:48 pm

GSP சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இன்று ஜனாதிபதியை சந்தித்தபோது இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மீன்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்குதல் மற்றும் GSP சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாக கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் டேவிட் டேலி இதன்போது உறுதியளித்துள்ளார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் போன்றவற்றிற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்