ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் இன்று விசாரணை

ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் இன்று விசாரணை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 11:14 am

ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்  ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

“ஹெஜின்” எண்ணெய் கொள்வனவின்போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பண மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவினர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக முன்னாள் மத்திய வழங்கி ஆளுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முற்பகல் 9.30 தொடக்கம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்