ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 3:56 pm

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

காயமடைந்தவர் வட்டவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரொசல்ல பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்