மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 11:56 am

மட்டக்களப்பு பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவைக்கு சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 மற்றும் 27 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு குருநாகல் வீதியில் மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் ஒன்றும் லொறியொன்றும் மோதியதில் இவர்கள் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் இருவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 17 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்