தொழிற்சங்க நடவடிக்கையால் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

தொழிற்சங்க நடவடிக்கையால் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

தொழிற்சங்க நடவடிக்கையால் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 10:59 am

தமது தொழிற்சங்க நடவடிக்கையால்  சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர்வழங்கல்  தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீர் வழங்கல்  ஊழியர்கள் கடந்த வார இறுதி நாட்களில் மேலதிக நேர சேவை மற்றும் வார இறுதி கடமையிலிருந்து விலகியிருந்தனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையால்  நாட்டின் பல பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்பட்டதாக நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்  உப்பாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அனைத்து ஊழியர்களும் இன்றைய தினம் ஆறு மணித்தியாலங்கள் சேவையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக   அவர் குறிப்பிட்டுள்ளார்

சம்பள உயர்வு உள்ளிட்ட  இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அமைச்சின் செயலாளர் கருணாசேன  ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்