தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளன – சி.வி.விக்னேஸ்வரன்

தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளன – சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 6:43 pm

தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில் 252 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறைகளை கருத்தில் கொண்டு அதற்கமைய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்