ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 10:01 pm

ஜனாதிபதியின் சகோதரர் மறைந்த பிரியந்த சிறிசேனவின் இறுதி அஞ்சலி இன்று மாலை இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பிரியந்த சிறிசேன உயிரிழந்தார்.

பொலன்னறுவையிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது பூதவுடலுக்கு பெருந்திரளானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆளும், எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகளும், பிரதேசவாசிகளும் பிரியந்த சிறிசேனவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

43 வயதான பிரியந்த சிறிசேனவின் இறுதி கிரியைகள் இன்று மாலை பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்