சரண குணவர்தன பிணையில் விடுதலை

சரண குணவர்தன பிணையில் விடுதலை

சரண குணவர்தன பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 4:39 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் ரூபா வீதமான 5 சரீர பிணைகளில் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தொகை இரும்பிற்காக நபரொருவரிடம் இருந்து 96 இலட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டு குறித்த இரும்பை அவருக்கு வழங்காத குற்றச்சாட்டு தொடர்பில் சரண குணவர்தன அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பிலான மனு ஜூலை மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்