கடதாசி ஆலை ஊழியர்களின் தொடரும் உண்ணாவிரதம்

கடதாசி ஆலை ஊழியர்களின் தொடரும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 6:55 pm

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

தமக்கான சம்பளம் முழுமையாக வழங்கப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

5 மாத சம்பள நிலுவையை முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 16 ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.

தமக்கான சம்பளம் முழுமையாக வழங்கப்படும் வரையில், போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாராமுகமாக பொறுப்பின்றி செயற்படுவதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நிலுவை சம்பளத்தை முழுமையாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ள ஊழியர்கள், பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்