ஊடக வரலாற்றில் அதிகபட்ச புலமைப்பரிசில் தொகையை வழங்கிய சக்தி எப்.எம்

ஊடக வரலாற்றில் அதிகபட்ச புலமைப்பரிசில் தொகையை வழங்கிய சக்தி எப்.எம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 12:52 pm

இலங்கை ஊடக வரலாற்றில் அதிகபட்ச புலமைப்பரிசில் தொகையை வழங்கிய பெருமையை சக்தி எப்.எம் தனதாக்கிக் கொண்டது.

தமிழ் பேசும் மக்களின் சக்தியான சக்தி எவ்.எம்மினால் செயற்படுத்தப்பட்ட சக்தி எப்.எம். கேட்டால், கேட்ட வரம் கிடைக்கும் திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை(28) புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இந்த புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள இளைஞர் யுவதிகள், தமது உயர் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், சக்தி எப்.எம்மினால் சுமார் 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை இந்த நிகழ்வின் போது புலமைப் பரிசிலாக வழங்கப்பட்டது.

அத்துடன், கடந்த ஆண்டு ஐந்தாம்  தர புலமைப் பரிசில் பரீட்சையில், வலய மட்டத்தில் அதி விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு கணிணி டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கான புலமைப் பரிசிலும் வழங்கப்பட்டது.

மேலும், சக்தி எப்.எம்மின் காலை நேர நிகழ்ச்சியான வணக்கம் தாயகம் நிகழ்ச்சியில் நடாத்தப்பட்ட “ஒரு நிமிடம் பேசு, ஒரு லட்சம் காசு”  போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்