உலகக்கிண்ண அணியினை அறிவித்தது ஐ.சி.சி

உலகக்கிண்ண அணியினை அறிவித்தது ஐ.சி.சி

உலகக்கிண்ண அணியினை அறிவித்தது ஐ.சி.சி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 9:45 am

உலகக்கிண்ண போட்டிகள் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையில் ஐ.சி.சி ஆனது 11 பேர் கொண்ட உலகக்கிண்ண அணியினை அறிவித்துள்ளது. இதில் ஸிம்பாப்வே அணியைச் சேர்ந்த டெய்லர் 12 ஆவது வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

அணித்தலைவராக பிரண்டன் மக்கலம் பெயரிடப்பட்டுள்ளார்.  அணியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அணி விபரம் வருமாறு:

பிரண்டன் மக்கலம் – அணித்தலைவர் (நியூசிலாந்து)

மார்டின் கப்டில் (நியூசிலாந்து)

குமார் சங்கக்கார – விக்கெட் காப்பாளர்(இலங்கை)

ஸ்டீபன் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

ஏ பிடி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

மக்ஸ்​வெல் (அவுஸ்திரேலியா)

அன்டர்சன் (நியூசிலாந்து)

டானியல் வெட்டோரி (நியூசிலாந்து)

மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

ட்ரென்ட் போல்ட் (நியூசிலாந்து)

மோர்னே மோர்கல் (தென்னாபிரிக்கா)

டெய்லர் (ஸிம்பாப்வே)

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்