இன்றிலிருந்து இலவச Wi-Fi

இன்றிலிருந்து இலவச Wi-Fi

இன்றிலிருந்து இலவச Wi-Fi

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 10:42 am

நாடாவிய ரீதியில்  இலவச Wi-Fi வசதிகளை மக்களுக்கு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 26 இடங்களில் இன்று முதல் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையத்தின் திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிடுகின்றார்.

இலவச Wi-Fi   திட்டத்தின் அங்குரார்ப்பண  நிகழ்வு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடளாவிய ரீதியில் ஆயிரம் இடங்களில் இலவச Wi-Fi   வசதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையத்தின் திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்