அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 1:14 pm

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்களே ஜாதிக்க பெரமுண என்ற அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்தின் காணி கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்நாட்டு வெளிநாட்டு மக்களை குடியமர்த்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்களே ஜாதிக்க பெரமுண தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாட்டிற்காக வெளிநாடுகளிடமிருந்து பணம் பெறப்பட்டமைக்கான தகவல்களும் உள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அங்குருகல்லே சிறி ஜினானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவரத்தனவும் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்