வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சிலருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சிலருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சிலருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 4:20 pm

வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சிலருக்கு நாளை ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

வட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 15 ஆம் திகதி நடத்தப்பட்ட போட்டி பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் , அவர் குறிப்பிட்டார்.

மாகாணத்தில் நிலவும் கணிதம் , விஞ்ஞானம் , தகவல் தொழில்நுட்பம் , விவசாயம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்