நீர்கொழும்பு பகுதியில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

நீர்கொழும்பு பகுதியில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

நீர்கொழும்பு பகுதியில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 1:52 pm

நீர்கொழும்பு பிட்டிபன பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்