சிங்கப்பூரின் தேசப்பிதா லீ குவான் யூவின் இறுதிக் கிரியைகள் இன்று

சிங்கப்பூரின் தேசப்பிதா லீ குவான் யூவின் இறுதிக் கிரியைகள் இன்று

சிங்கப்பூரின் தேசப்பிதா லீ குவான் யூவின் இறுதிக் கிரியைகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 12:16 pm

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் தேசப்பிதாவுமான லீ குவான் யூவின் இறுதிக் கிரியைகள்
இன்று இடம்பெறவுள்ளன.

கடந்த 23 ஆம் திகதி இயற்கை எய்திய லீ குவான் யூவிற்கு உலக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரின் மறைவை முன்னிட்டு கடந்த ஒருவார காலமாக சிங்கப்பூரில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரின் நாடளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த லீ குவான் யூவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்

இந்நிலையில் லீ குவான் யூவின் இறுதிக் கிரியைகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று பிற்பகல் லீ குவான் யூவிற்கு மரியாதைசெலுத்தும் விதத்தில் சிங்கப்பூரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இன்றைய தினம் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்