உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் நீடிப்பு

உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் நீடிப்பு

உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 10:04 am

234 உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் மே மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புக்களின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, அரச நிர்வாக மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.

அதற்கமைய 201 பிரதேச சபைகள், 30 நகர சபைகள் மற்றும் 03 மாநகர சபைகளின் ஆட்சிக் காலம் மே 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வர்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாகவும் அமைசின் செயலாளர் குறிப்பிட்டார்.

குறித்த உளளூராட்சி அமைப்புக்களில் தொகுதிவாரி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளதால், அவற்றின் ஆட்சிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

மேலும் 65 உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக் காலம் ஜூலை 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், 21 அமைப்புக்களின் ஆட்சிக் காலம் ஒக்டோம்பர் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்