உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இன்று அவுஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இன்று அவுஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இன்று அவுஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 9:16 am

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தொடங்கின.

ஒன்றரை மாத காலமாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய இந்த உலகக் கிண்ண திருவிழாவில் இன்று இறுதி நாள் ஆகும்.

உலக சாம்பியன் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மெல்பேர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கைக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதி வரை தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து மலைக்க வைத்திருக்கும் பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறது.

அதே நேரத்தில் இதுவரை சொந்த ஊரில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் நடப்பு உலக கோப்பை தொடரில் இப்போது தான் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் ஆட இருக்கிறார்கள்

7 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் அவுஸ்திரேலியா ஏற்கனவே 1987, 1999, 2003, 2007–ஆம் ஆண்டுகளில் உலக மகுடத்திற்கு முத்தமிட்டிருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அவுஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலமாகும். தவிர, இது அவுஸ்திரேலிய தலைவர் மைக்கேல் கிளார்க்கின் கடைசி ஒரு நாள் போட்டி என்பதால் அவரை வெற்றியுடன் வழியனுப்புவதில் சக வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்