உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 3:35 pm

இம்முறை இடம்பெற்ற 11 ஆவது உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப்போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் கலக்கிய அவுஸ்திரேலியா 5 ஆம் முறையாகவும் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

184 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அபாரமாக வெற்றி பெற்றது. அணித்தலைவர் மைக்கல் கிளார்க் அபாரமாக துடுப்பெடுத்தாடி 74ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வோர்னர் 45 ஓட்டங்களையும் ஸ்மித் 56ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து சார்பாக போல்ட் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் எலியட் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோன்சன் மற்றும் போக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

முதல் முறையாக கிண்ணத்தை வெல்ல களமிறங்கிய நியூசிலாந்தின் கனவு பொய்யாகிப் போனது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்