அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது நியூசிலாந்து

அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது நியூசிலாந்து

அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது நியூசிலாந்து

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 12:54 pm

இம்முறை கிரிக்கட் உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான முனைப்புடன் துடுப்பெடுத்தாடி வந்த நியூசிலாந்து அணி 45 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மெல்பர்னில் நடைபெறும் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சினால் நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 39 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன

நியூசிலாந்து அணியின் தலைவர் பிரன்டன் மெக்கலம் மற்றும் மாட்டின் கப்டில் ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.

மெக்கலம் ஓட்டங்கள் எதனையும் பெறாது ஆட்டமிழந்தார்

மாட்டின் கப்டில் 34 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

க்ரன்ட எலியட் 83 ஓட்டங்களையும் கென் விலியம்சன் 12 ஓட்டங்களையும் டேயிலர் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன இன்றைய இறுதிப்போட்டியில் பிரதான நடுவராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்