அட்டாளைச்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்ற 2 பெண்கள் கைது

அட்டாளைச்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்ற 2 பெண்கள் கைது

அட்டாளைச்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்ற 2 பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 10:40 am

அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் பகுதிகளில் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்ற இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் குற்றத் தடுப்பு பிரிவு உத்தியோகஸ்தர்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்றிரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மின் இணைப்பு காரணமாக பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்