வெளிநாட்டுக் கொள்கையின்போது இலங்கை மத்தியஸ்த போக்கை கடைபிடிக்கும் – ஜனாதிபதி

வெளிநாட்டுக் கொள்கையின்போது இலங்கை மத்தியஸ்த போக்கை கடைபிடிக்கும் – ஜனாதிபதி

வெளிநாட்டுக் கொள்கையின்போது இலங்கை மத்தியஸ்த போக்கை கடைபிடிக்கும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2015 | 6:00 pm

வெளிநாட்டுக் கொள்கையின்போது தமது அரசாங்கம் மத்தியஸ்த போக்கை கடைபிடிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

சீனாவின் ஹேனான் மாகாணத்தில் இன்று ஆரம்பமான வருடாந்த போஆ மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிடையே வருமான இடைவெளியை குறைத்து வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக சமூகத்தினர் ஒரே மேடையில் கூடி கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் மாநாடாக போஆ மாநாடு கருதப்படுகின்றது.

இன்று முற்பகல் ஆரம்பமான இம்முறை மாநாட்டில் 15 அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்

வறுமையை ஒழித்து மக்களுக்கு நிலையான அபிவிருத்தியை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பாக இம்முறை மாநாட்டின்போது விரிவாக ஆராயப்படுகின்றது.

மாநாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்