பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதி

பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதி

பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2015 | 1:53 pm

பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (30) தொடக்கம் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்