தேசிய பாடசாலைகளின் பராமரிப்பிற்கு நிதி பெற்றுக் கொடுக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளின் பராமரிப்பிற்கு நிதி பெற்றுக் கொடுக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளின் பராமரிப்பிற்கு நிதி பெற்றுக் கொடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2015 | 5:39 pm

தேசிய பாடசாலைகளின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 45 கோடி ரூபா நிதி பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

தேசிய பாடசாலைகளில் மாணவர்களிடம் அதிக பணம் அறவிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தேசிய பாடசாலைகளின் தேவைப்பாடுகளுக்கு அமைய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

மாணவர்களிடையே பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பில் அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்