ஜனாதிபதி இன்று  ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்

ஜனாதிபதி இன்று ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்

ஜனாதிபதி இன்று ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2015 | 9:15 am

சீனாவில் நடைபெறவுள்ள ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஷேட உரையாற்றவுள்ளார்.

ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷூவோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்