ஜனாதிபதியின்  இளைய சகோதரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட் கிழமை

ஜனாதிபதியின் இளைய சகோதரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட் கிழமை

ஜனாதிபதியின் இளைய சகோதரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட் கிழமை

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2015 | 12:17 pm

தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

1972 டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த பிரியந்த சிறிசேன மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

தனது 43 ஆவது வயதில் பிரியந்த சிறிசேன  உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 3.50 அளவில் பிரியந்த சிறிசேன உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளும் நீதாவான் விசாரணையும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரியந்த சிறிசேன மீது நேற்று முன்தினம் பொலன்னறுவை பகுதியில் வைத்து கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பிரியந்த சிறிசேன பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே, தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜூ என்ற பெயரில் மக்களின் ஆதரவை பெற்ற பிரியந்த சிறிசேன சமூக சேவையாளரும் , தூதுவருமாக செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்