23 வருட உலகக்கிண்ண வரலாற்றை காப்பாற்றுமா இந்தியா?

23 வருட உலகக்கிண்ண வரலாற்றை காப்பாற்றுமா இந்தியா?

23 வருட உலகக்கிண்ண வரலாற்றை காப்பாற்றுமா இந்தியா?

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 12:29 pm

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணிதான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகின்றது. அந்தப் பெருமையை இந்தியா கட்டிக் காக்குமா, நாளைய அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகிறது.

1992 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணதை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் வென்றன.

இதன் பிறகு 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2003 ஆம் ஆண்டு இந்தியா, 2007 ஆம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அங்கு அவுஸ்திரேலியாவிடம் வீழ்ந்தன.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலகக்கிண்ண போட்டியில் இரு ஆசிய அணிகள் இறுதிப்போட்டியில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும். அப்போட்டியில் இந்தியா கிண்ணத்தை வென்றது.

நடப்பு உலகக்கிண்ண திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் காலிறுதியுடன் வெளியேறின. இந்தியா மட்டுமே எஞ்சி இருக்கின்றது.

சிட்னியில் நாளை நடக்கும் அரையிறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் போட்டியிட இருக்கின்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்