19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 4:31 pm

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி கோமின் தயாசிறி, உதய கம்மன்பில மற்றும் எல்.பி.. பெரேரா ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஒன்றிலிருந்து 54 வரையான சரத்துக்களுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரித்த பின்னர் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்ற வேண்டுமென உதய கம்மன்பில தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் 70 ஆம் சரத்து, 33 ஆம் சரத்து மற்றும் 14 ஏ பிரிவு ஆகியன அரசியலமைப்பிற்கு முரணானவை என சட்டத்தரணி கோமின் தயாசிறி தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒருவருடத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை இரத்து செய்யுமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்