மேல் மாகாண நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியம் இன்று 4 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

மேல் மாகாண நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியம் இன்று 4 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

மேல் மாகாண நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியம் இன்று 4 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 8:20 am

மேல் மாகாண நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியம் இன்று நான்கு மணித்தியால பணி பகிஷ்கரிப்பில்  ஈடுபடவுள்ளது.

ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட சம்பள உயர்வு இதுவரை கிடைக்காமையே இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு காரணம் என நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் பொறியியலாளர் உப்பாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வழங்கிய உறுதிமொழியால் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தபோதிலும் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனைக் கண்டிக்கும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் நீர் வழங்கல் ஊழியர்கள் முற்பகல் ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்