மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது நியூஸ்பெஸ்ட்

மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது நியூஸ்பெஸ்ட்

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 9:13 pm

இலங்கை தொலைத் தொடர்பாளர்கள் ஒன்றியத்தின் 09 ஆவது விருது வழங்கல் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

பல்வேறு தொழிற்துறைகளில் தாய்நாட்டில் கௌரவம் பெற்றுக்கொடுத்தவர்களை கௌரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

தொலைக்காட்சி மற்றும் வானொலி துறைகளில் நியூஸ்பெஸ்ட் மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது.

நியூஸ்பெஸ்ட்டின் பொது முகாமையாளர் யசரத் கமல்சிறிக்கு இதன்போது விருது வழங்கப்பட்டதுடன், அந்த விருதை எமது சக ஊழியர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

எமது சகோதர வானொலியான சிரச எப்.எம் இன் செய்தி ஆசிரியரும், நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளருமான ஸ்ரீபால் வன்னியாராச்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிரச எப்.எம் செய்திப் பிரிவின் ஊடகவியலாளர் பிரியங்கா திஸாநாயக்கவிற்கும் இந்த விருது விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்