முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே அபிலாஷை – பிரதமர்

முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே அபிலாஷை – பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 9:11 pm

முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவதே தமது அபிலாஷை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனைக் கூறினார்.

அரச நிர்வாக அமைச்சின் அனுசரணையுடன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தாம் ஆரம்பித்த திட்டங்களை ஏன் நிறுத்தியுள்ளீர்கள் என மஹிந்த ராஜபக்ஸ கேள்வியெழுப்பியுள்ளதாகவும் தூய்மையான திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்