பிரதான கட்சியாக இணைவது தொடர்பில் தீர்மானிக்கும் இயலுமை ஸ்ரீ.சு.கட்சிக்கு உள்ளது – பிரியதர்ஷன யாப்பா

பிரதான கட்சியாக இணைவது தொடர்பில் தீர்மானிக்கும் இயலுமை ஸ்ரீ.சு.கட்சிக்கு உள்ளது – பிரியதர்ஷன யாப்பா

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 8:15 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, பிரதான கட்சியாக தேசிய அரசாங்கத்தில் இணைவது
தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இயலுமை உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இருக்கவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியாக நியமிக்கப்படும் ஒருவருக்கு சில அதிகாரங்களை மாத்திரமே வழங்கும் வகையில் இடமளிக்க வேண்டும் என்பதுவே தமது நிலைப்பாடு என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் W.D.J செனவிரத்ன குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

[quote]தேர்தல் முறைமையை மாற்றாது, அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டால், நாட்டில் ஸ்திரமற்ற தன்மை ஏற்படக்கூடும். அந்த ஸ்திரமற்ற நிலைமையை இல்லாமல் செய்வதற்காக அரசியலமைப்புத் திருத்தமும் தேர்தல் முறைமையில் திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, தற்போது காணப்படும் விகிதாசார முறைமை மற்றும் தொகுதிவாரி முறைமை ஆகிய இரண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையொன்று உள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக உள்ளது. அதனை 250 ஆக உயர்த்தவேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த யோசனைக்கு எமது கட்சி எதிரானது.[/quote]

என தெரிவித்தார்.

இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் தேர்தல் திருத்தத்தையும் கொண்டுவருமாறு வலியுறுத்துவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்
அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்