நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் சிலர்மீது தாக்குதல்

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் சிலர்மீது தாக்குதல்

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் சிலர்மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 1:12 pm

கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் சிலர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப் பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோத்தர்கள் சிலர் மீதே தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சுற்றிவளைப்பின் போது பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அங்கு வந்த சிலர் பொலிஸார் மீது தாக்குல் மேற்கொண்டு சந்தேக நபரை பலவந்தமாக விடுவித்து அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த தாக்குலில் இரண்டு பொலிஸ் உத்தியோத்தர்கள் காயமடைந்துடன் தாக்குல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்