தந்தையைப் போல முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்றார்  உத்ரா உன்னிகிருஷ்ணன்

தந்தையைப் போல முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்றார் உத்ரா உன்னிகிருஷ்ணன்

தந்தையைப் போல முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்றார் உத்ரா உன்னிகிருஷ்ணன்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 10:15 am

ஒவ்வொரு வருடமும் திரைத்துறையினர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகிறது. கடந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 62வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிறந்த பாடகிக்கான விருது உன்னிகிருஷ்ணனின் மகளான உத்ராவிற்கு கிடைத்துள்ளது. சைவம் திரைப்படத்தில் “அழகே” பாடலுக்காகவே கிடைக்கப்பெற்றுள்ளது.

உத்ராவின் தந்தை உன்னிகிருஷ்ணனும் தான் பாடிய முதல் பாடலுக்கே விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னவளே” பாடலுக்காகவே இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர்- பாபி சிம்ஹா(ஜிகர்தண்டா)
சிறந்த தமிழ்(மாநில விருது) படம்- குற்றம் கடிதல்
சிறந்த நடிகை- கங்கனா ரனாவத்(குயின்)
சிறந்த பின்னணி பாடகி- உத்ரா உன்னிகிருஷ்ணன் (உன்னிகிருஷ்ணன் மகள்)
சிறந்த எடிட்டர்- விவேக் ஹர்ஷன்(ஜிகர்தண்டா)
சிறந்த நடிகர்- கன்னடம் விஜய் (நானு அவனல்ல அவலு)
சிறப்பு புத்தகம்(எழுத்தாளர்)- தனஞ்செயன்(Pride of Tamil cinema)
சிறந்த பாடலாசிரியர்- நா.முத்துக்குமார் (சைவம்)
சிறந்த பின்னணி பாடகர்- சுஷ்வந்த் சிங் (ஹைடர்)
சிறந்த இசையமைப்பாளர்- விஷால் பரத்வாஜ் (ஹைடர்)
சிறந்த பின்னணி இசை- கோபி சந்தர் (1983)
குழந்தைகளுக்கான சிறந்த படம்- காக்கா முட்டை
சிறந்த பொழுதுபோக்கு படம்- மேரி கோம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்