ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீனா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீனா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீனா பயணம்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 7:56 am

நான்கு  நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சீனாவிற்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி இன்று பிற்பகல் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தினை சென்றடையவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சீனப் பிரதமர் லீ கே சியனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு சீன ஜனாதிபதி ஷி ஜிங் பிங் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

சீன ஜனாதிபதியுடன் நாளை பகல் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ராஜித சோனாரத்ன, ரவூப் ஹக்கிம், ஜகத் புஸ்பகுமார, விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்