சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் நடவடிக்கை மேற்​கொள்ள  பிரத்தியேக பொலிஸ் பிரிவு

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் நடவடிக்கை மேற்​கொள்ள பிரத்தியேக பொலிஸ் பிரிவு

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் நடவடிக்கை மேற்​கொள்ள பிரத்தியேக பொலிஸ் பிரிவு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 8:16 am

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பிரத்தியேக பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் பிரிவை பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் கூறியுள்ளார்.

உத்தேச பொலிஸ் பிரிவையொட்டி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட பிரிவுகளை ஆரம்பிக்குமாறும் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்