காலி ரத்கம பிரதேச சபையின் தலைவர் கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

காலி ரத்கம பிரதேச சபையின் தலைவர் கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

காலி ரத்கம பிரதேச சபையின் தலைவர் கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 8:05 am

காலி ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஸ்பகுமார மென்டிஸை சுட்டுக்கொலை செய்த  சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணை தொடர்வதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின்  தலைமையில்  விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை  பெற்று வருபவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குழுவில் இருந்த ஒருவர் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்

ஹிக்கடுவயில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள்  நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ரத்கம பிரதேச சபையின் தலைவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நால்வரடங்கிய குழுவொன்று மேற்கொண்டமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்