இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று தமிழகத்திற்கு

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று தமிழகத்திற்கு

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று தமிழகத்திற்கு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 8:25 am

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 54 பேரும் இன்று தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த 54 மீனவர்களையும் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் நேற்று விடுதலை செய்திருந்தன.

இவர்களை விடுதலை செய்வதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 54 மீனவர்களும் இன்றும் மண்டபம் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்