அல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பள்ளி மாணவர்களும் பயணித்துள்ளதாக தகவல்

அல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பள்ளி மாணவர்களும் பயணித்துள்ளதாக தகவல்

அல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பள்ளி மாணவர்களும் பயணித்துள்ளதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 9:26 am

பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த விமானத்தில் ஜேர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் இருந்தனர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே விமானம் பறத்தல் குறித்த தகவல்களை, தரவுகளை பதிவு செய்யும் “கறுப்புப் பெட்டிகளில் ஒன்று விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேஸிநேவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் பெட்டி, விமானம் பறக்கும்போது அது பறப்பது குறித்த தொழில்நுட்பத் தரவுகளை பதிவு செய்யும் கருவியா அல்லது கடைசி நேரத்தில் விமானிகளின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் ஒலிகளைப் பதிவு செய்யும் கருவியா என்பது தெளிவாகவில்லை.

விபத்துக்குள்ளான விமானம் தூள்தூளாகச் சிதறியுள்ளதாகவும், எந்தவொரு பகுதியும் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்று பிரான்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்த 150பேரும் உயிரிழந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

plane crash


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்