அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 9:16 pm

காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

காணாமற்போன லலித்- குகன் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். நகரிலிருந்து வைத்தியசாலை வீதி சத்திரச்சந்தி காங்கேசன்துறை வீதியூடாக மின்சார நிலைய வீதி வரை பேரணியொன்றை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் முன்னிலை சோசலிசக் கட்சியினர் விநியோகித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்