உலகக் கிண்ண போட்டியில் அரையிறுதிச் சுற்றிற்கு தெரிவாகும் அணிகளை சரியாக தெரிவித்த சச்சின்(Video)

உலகக் கிண்ண போட்டியில் அரையிறுதிச் சுற்றிற்கு தெரிவாகும் அணிகளை சரியாக தெரிவித்த சச்சின்(Video)

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 12:04 pm

சச்சின் டென்டுல்கர் இந்திய கிரிக்ககெட் ரசிகர்களினால் ‘கிரிக்கெட் கடவுள்’ (God Sachin) என கருதப்படுபவர்.

சச்சின் படைத்த சாதனைகளும் அவரினால் அடிக்கப்பட்ட அபார சதங்களுமே அவரை ‘கிரிக்கெட் கடவுள்’ என அழைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் 4 அணிகளை முன்கூட்டியே  சச்சின் சரியாக தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் நடைபெற்ற, சச்சின் டென்டுல்கரினால் எழுதப்பட்ட ‘Playing It My Way’என்ற சுயசரிதை வெளியீட்டு விழாவின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே சச்சின் இதனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா,தென் ஆபிரிக்கா,நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளே இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றிற்கு தெரிவாகும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

அரையிறுதிச் சுற்றிற்கு தெரிவாகும் அணிகள் தொடர்பில் அவர் தெரிவித்த காணொளி Youtube ஊடாக அதிகளவான கிரிக்ககெட் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளது.

அந்த காணொளியே இது..


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்