அரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறுவதாக சம்பிக்க குற்றச்சாட்டு

அரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறுவதாக சம்பிக்க குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 7:54 pm

19 ஆவது திருத்தத்திற்கான வாக்களிப்பை வெற்றிபெறச் செய்ய முடியாத குழுவினர், அரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாக ஐாதிக்க ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெளிவுபடுத்தும் ஐாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க

இந்த ஆவணத்தில் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தேர்தல் முறைமையில் காணப்படும் முக்கிய பகுதிகளை நீக்கி, நிறைவேற்று ஜனாதிபதி பதவி மற்றும் சுயாதீன ஆணைக்குழு தொடர்பான யோசனைகளை மாத்திரம் கொண்டுவந்துள்ளனர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நேற்று பிரதமர் புதிய திருத்தமொன்றை கொண்டுவந்துள்ளார் அந்த திருத்தத்தில் ஜனாதிபதி அரச தலைவர் மாத்திரமே என்பது தெளிவாக தெரிகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்