19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 1:46 pm

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

முதலாம் வாசிப்பிற்காக புதிய அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் இன்று முதல் நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்பு இடம்பெறவுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்